புரட்டப்போகும் சூறாவளிக் காற்று - பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!
தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதனையடுத்து, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்ய உள்ளது.
மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதால் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தென்கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், வங்க கடலில் பலமாக தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனையடுத்து, வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
திரிகோணமலைக்கு 115 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கிறது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11.30 மணிக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கே சுமார் 115 கிமீ தொலைவிலும், காரைக்காலிலிருந்து தென்கிழக்கே சுமார் 400 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை இலங்கை கடற்கரை பகுதிகளில் கடந்திருக்கிறது.
இதனால், தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.