ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்; முதலிடம் பிடித்த இந்தியா - குவியும் வாழ்த்துக்கள்..!
ஐசிசி வெளியிட்ட ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியாவிற்கு வருகை தந்த நியூசிலாந்து அணி 3-வது மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது.
இந்நிலையில், நேற்று இந்தூரில் நடைபெற்ற கடைசி 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கினர்.
முதல் பந்திலிருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர். நியூசிலாந்தின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டு தெறிக்க விட்டனர். இதனால் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.
இப்போட்டியில், 20 ஓவர்களில் இந்தியா 165 ரன்களை எடுத்தது. கேப்டன் ரோகித் முதலாவதாக சதம் அடித்து அசத்தினார். பின்பு, சுப்மன் கில்லும் சதம் அடித்து மாஸ் காட்டினார். ரோகித் சர்மாவிற்கு இது 30வது சதமாகும்.
தற்போது இந்தியா 26 ஓவரில் 212 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி 50 ஓவரில் 385 ரன்களை குவித்து, நியூசிலாந்தை 295 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா
இதனையடுத்து, இந்த வெற்றி மூலம், 114 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி, தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவை விட ஒரு புள்ளி குறைவாக உள்ள இங்கிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், நியூசிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளன.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்திய அணிக்கு பாராட்டுக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
The new No.1 team in the @MRFWorldwide ICC Men's ODI Team Rankings ?
— ICC (@ICC) January 24, 2023
More ? https://t.co/sye7IF4Y6f pic.twitter.com/hZq89ZPO31