அண்ணாமலைக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் : கனிமொழி எம்பி எச்சரிக்கை

Smt M. K. Kanimozhi DMK
By Irumporai Apr 20, 2023 05:54 AM GMT
Report

அண்ணாமலை நீதிமன்றத்தில் பதில் சொல்லியாகவேண்டும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

அண்ணாமலை 

தூத்துக்குடியில் 4-ம் ஆண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனிமொழி எம்பி, அண்ணாமலைக்கு விரைவில் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படும். சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலைக்கு திமுக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் நானும் வழக்கு தொடர்வேன் என தெரிவித்திருந்தார்.

அண்ணாமலைக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் : கனிமொழி எம்பி எச்சரிக்கை | Nnamalai Soon Kanimozhi Mp Sensational Notice

 கனிமொழி எம்பி நோட்டீஸ்

இதற்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்த நிலையில், அண்ணாமலை நிச்சயமாக நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என கனிமொழி எம்பி கூறியுள்ளார். இதனிடையே, உண்மைக்கு புறம்பான, அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அதில், பாஜக மாநில தலைவர் 48 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால், தன்மீது அவதூறு பரப்பியதற்காக 50 கோடி ரூபாய் மான நஷ்ட இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அண்ணாமலைக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என கனிமொழியும் கூறியுள்ளார்.