என்னோட படங்களை புறக்கணிக்காதீங்க : சோகத்தில் அமீர்கான்

Aamir Khan
By Irumporai Aug 02, 2022 12:27 AM GMT
Report

பாய்காட் லால் சிங் சத்தா ஹேஷ்டேக் அண்மையில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பெற்ற நிலையில்இது குறித்து நடிகர் அமீர்கான் வருத்தம் தெரிவிதுள்ளார்.

அமீர்கான் சர்ச்சை

கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் கொடுத்த பேட்டி ஒன்றில் ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என்று அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டதாகவும் பேசினார்

அவரது இந்தப்பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி, ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை பெற்றது .

என்னோட படங்களை புறக்கணிக்காதீங்க :  சோகத்தில் அமீர்கான் | Nment Aamir Khan Boycott Movie Laal Singh Chaddha

அவர் பேசிய அந்தக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அண்மையில் ட்விட்டரில் பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

மன்னிப்பு கேட்ட அமீர்கான்

இந்த நிலையில் அது குறித்து அமீர்கானிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகர் அமீர்கான், “ இது போன்ற செயல்கள் எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது.

காரணம், ஏராளமானோரின் இதயங்கள் எனக்கு இந்தியா பிடிக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. நாட்டை நேசிக்கிறேன் நான் உண்மையில் இந்த நாட்டை நேசிக்கிறேன்.

நான் அப்படித்தான். சிலர் அப்படி உணர்ந்தால் அது துர்திஷ்டவசமானது. மேலும் தனது ரசிகர்களிடமும், பார்வையாளர்களையும் கேட்டுக்கொண்ட அமீர்கான்.

தயவு செய்து எனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என்றும் தயவு செய்து என் படங்களை பாருங்கள்” என்று பேசினார்.