என்எல்சி முற்றுகைப் போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது!
என்எல்சி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்துள்ளனர்.
என்எல்சி விவகாரம்
கடலூர். நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கோ. ஆதனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, விவசாயிகள் 2000 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்திய அனைத்து நிலங்களுக்கும் சமமான இழப்பீடு வழங்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திடீரென என்எல்சி 30 ராட்சச மண் வெட்டும் இயந்திரத்தை வைத்து அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய விளைநிலத்தில் பயிர்களை அழித்து பரவனாறு வெட்டும் பணியை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நெய்வேலியில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அன்புமணி ராமதாஸ் கைது
இதில் நிலங்களை கையகப்படுத்தி ஏன் ஒப்படைக்க வேண்டும் மற்றும் என்எல்சி க்கு ஏன் தமிழக அரசு உடந்தையாக இருக்கிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்துள்ளனர்.
தடையை மீறி என்ல்சி நிறுவனத்திற்கும் நுழைய முயன்றவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது என்எல்சி க்கு எதிராக போராட்டம் நடத்திய அன்புமணியை கைது செய்ததை கண்டித்து பாமக வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் காவல் துரையின் வாகன கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.