உணவில் கரப்பான் பூச்சி - கடுப்பான நடிகை!
தனக்கு உணவு டெலிவரி செய்த உணவகம் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் சரமாரியாக குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழில் ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன், பொன்.மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் ஸ்விக்கி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டை ஆர்டர் செய்ததாகவும், சாப்பாட்டை சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஸ்விக்கி நிறுவனம் மற்றும் உணவங்கள் என்ன தரத்தை தற்போது பின்பற்றுகின்றன என்பது தனக்கு தெரியவில்லை என்றும், இதுவரை இரண்டு முறை எனது உணவில் கரப்பான் பூச்சியை கண்டெடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனம் தங்களது செயலியில் தரமான உணவகங்களை
இணைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.