தோனி கிட்ட திறமை இருக்கு.. ஆனால் அந்த விஷயம் இல்ல? சர்ச்சையில் சிக்கிய பிரபல வீரர்!

MS Dhoni Chennai Super Kings Cricket Sports IPL 2024
By Jiyath Jun 03, 2024 07:48 AM GMT
Report

எம்.எஸ்.தோனி தொடர்பான சர்ச்சைக்கு சன்ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். 

சர்ச்சை வீடியோ 

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கியவர் நிதிஷ் குமார் ரெட்டி. இந்த தொடரில் 303 ரன்களும், 3 விக்கெட்களும் வீழ்த்திய அவரை பலரும் பாராட்டி வந்தனர்.

தோனி கிட்ட திறமை இருக்கு.. ஆனால் அந்த விஷயம் இல்ல? சர்ச்சையில் சிக்கிய பிரபல வீரர்! | Nitish Reddy Explains About Dhoni Controversy

இதனிடையே ஒரு பேட்டியில் "தோனிக்கு திறமை உண்டு. ஆனால் டெக்னிக் இல்லை. விராட் கோலி அளவுக்கு தோனியிடம் டெக்னிக் இல்லை" என்று நிதிஷ் குமார் ரெட்டி பேசியதாக ஒரு வீடியோ பரவியது. இதனால் ஆத்திரமடைந்த தோனி ரசிகர்கள் நிதிஷ் குமார் ரெட்டிக்கு எதிரான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர்.

டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் தோனி? நெகிழவைத்த சம்பவம் - இதை கவனிச்சீங்களா!

டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் தோனி? நெகிழவைத்த சம்பவம் - இதை கவனிச்சீங்களா!

விளக்கம் 

இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர் "நான் மஹி பாயின் (தோனியின்) மிகப்பெரிய ரசிகன். திறமை முக்கியமா? அல்லது மனநிலை முக்கியமா? என என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது.

தோனி கிட்ட திறமை இருக்கு.. ஆனால் அந்த விஷயம் இல்ல? சர்ச்சையில் சிக்கிய பிரபல வீரர்! | Nitish Reddy Explains About Dhoni Controversy

நான் அதற்கு மனநிலைதான் முக்கியம் என பதிலளித்தேன். அப்போது அதற்கு உதாரணமாக தோனியை சொன்னேன். ஒரு வெற்றியை தீர்மானிப்பதில் மனநிலை மிக முக்கிய பங்கு வகிப்பதாக நான் நம்புகிறேன்.

எனது முந்தைய பேட்டியில் நான் கூறியதை சிலர் முழுமையாக வெளியிடாமல் கத்தரித்து வெளியிட்டு வருகின்றனர். தவறான விஷயங்களை பரப்ப வேண்டாம். முழு கதையையும் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.