நிதிஷ் குமாரின் பீகார் அரசியல் : இன்ஜினியர் முதலமைச்சரான கதை

By Irumporai Feb 07, 2023 10:26 AM GMT
Report

1951ஆம் ஆண்டு பாட்னா நகரை அடுத்த பக்தியார்பூரில் பிறந்தவர் நிதிஷ் குமார். பிகார் பொறியில் கல்லூரியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த அவர், அரசியலுக்கு நுழைந்த காலத்தில் இன்ஜினியர் பாபு என்றே அழைக்கப்பட்டு வந்தார். இன்றளவும் பிகாரின் தொலைதூர கிராமங்களில் அந்தப் பெயருடனேயே நதிிஷ் அறியப்படட நிதிஷ் குமார் அதன் பிறகு பீகார் அரசியலின் முகிய முகமானார் என்றால் அது நிதர்சனமான உண்மை.

நிதிஷ்குமார்

ஐக்கிய ஜனதா தளத்தின் கடந்த 20 ஆண்டு கால அரசியலை உற்றுப் பார்த்தால், அந்த கட்சி, ஆட்சியிலும் அதிகாரத்திலும் தொடர்ந்து நீடிக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நிதிஷ் குமாருக்கு அந்த உத்தி அத்துப்படி. எப்போது, எங்கு, எப்படி பேசினால் காரியம் நடக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர் எனக் கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில் வாக்காளர்களிடம் பேசும் முன்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் உள்கட்சி ஆய்வில், அரசியல் காற்று தங்களுக்கு சாதகமாக இருக்காது என கூறப்பட்டிருந்தது.

இது ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள மக்களின் பிரதிபலிப்பா? இதை சரி செய்ய என்ன செய்யலாம் என அக்கட்சியினர் சிந்தித்தனர். 

நிதிஷ் தேர்தல் வியூகம்

அரசியல் கூட்டணிகளுக்கு இடையே செய்து கொள்ளும் வசதிகள் போல, ஒருவேளை தேர்தல் முடிவில் நிதிஷ் குமார் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்காதபோது, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏற்பட்டால் நிதிஷ் குமாரே முதல்வராக தொடருவார் என்று அக்கட்சித் தலைமை தெளிவாகவே கூறியது. அதன் அடிப்படையிலேயே தேர்தல் பரப்புரைகளின்போது நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தியே, பாஜகவும் கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தலை சந்தித்தன.

நிதிஷ் குமாரின் பீகார் அரசியல் : இன்ஜினியர் முதலமைச்சரான கதை | Nitish Kumar History

2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், நிதிஷ் குமாரின் கட்சி ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்திருந்தது. அப்போது நடந்த பேரவைத் தேர்தலின்போது, லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியை காட்டாட்சி என்று முழக்கமிட்ட நிதிஷ் குமார், ஆட்சியில் இருந்த 15 ஆண்டுகளும் அவர்கள் மக்களை ஏமாற்றும் வகையில் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

நாங்கள் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் பேசியவற்றை சாதித்து நிறைவேற்றிக் காட்டினோம் என்று பரப்புரை செய்தார். அந்த தேர்தலில் காட்டாட்சிக்கும், நல்லாளுகைக்கும் இடையிலான மோதல் இது என்கிற முழக்கத்துடன் நிதிஷ் கட்சி வாக்காளர்களை சந்தித்தது. பிஹாரில் உள்ள மூத்த பத்திரிகையாளர் மணிகாந்த் தாகூர், "2005 முதல் 2010ஆம் ஆண்டுவரை பிகாரில் ஏராளமான நலத்திட்டங்களை நிதிஷ் குமார் நிறைவேற்றி வாக்காளர்களைக் கவர்ந்தார்.

அரசியல் தந்திரம்

அதில் குறிப்பிடத்தக்கவை, மாணவிகளுக்கு பள்ளிச்சீருடை வழங்கும் திட்டம். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் தமது முதலாவது ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதியை அவர் செலவிட்டார். ஆனால், கடந்த ஏழரை ஆண்டுகளில் நிதிஷின் பதவிக்காலத்தில், ஊழல் மலிந்து காணப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் உள்ளது," என்று கூறினார்

2014ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடந்தபோது பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ், தனித்து தேர்தல் களம் கண்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றிக் கனியை அவரால் பறிக்க முடியவில்லை. ஆனால், இதை வேறு விதமாக பார்க்கும் பேராசிரியர் டி.எம். திவாகர், "அந்த தேர்தலில் போதிய மேல் தட்டு மக்களின் வாக்குகள் கிடைக்காததை அடுத்து, ஜித்தின் ராம் மன்ஜியை முதல்வராக்கினார் நிதிஷ்.

இதன் மூலம் அந்த சமூகத்தைச் சேர்ந்த முதல்வரை ஆட்டி வைக்கும் சூத்திரதாரியாக தான் இருப்பதாக பட்டியலின மக்களிடையே நிதிஷ் காட்டிக் கொண்டார். பிகாரில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து கோலோச்சி வந்த லாலு பிரசாத் யாதவ் கட்சியை வீழ்த்தி, அரசியல் அதிகாரத்தில் அமர வேண்டுமானால், அதற்கு தனித்து அரசியல் செய்வது பலன் கொடுக்காது என்பதை உணர்ந்த நிதிஷ்.

நிதிஷ் குமாரின் பீகார் அரசியல் : இன்ஜினியர் முதலமைச்சரான கதை | Nitish Kumar History

ஜெயபிரகாஷ் நாராயணின் அரசியல் பள்ளியில் கற்றுக் கொண்ட படிப்பினையின் விளைவாக, லாலு கட்சியுடனேயே நிதிஷ் தேர்தல் உறவு வைத்துக் கொண்டார். சமூக நீதிக்கான வளர்ச்சி என்ற முழக்கத்தை அந்த இரு தலைவர்களும் முன்வைத்து மக்களை சந்தித்தார்கள். தனது அமைச்சரவையில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வியை துணை முதல்வராக்கினார்.

நிதிஷ் குமாரின் பீகார் அரசியல் : இன்ஜினியர் முதலமைச்சரான கதை | Nitish Kumar History

ஆனால், தேஜஸ்விக்கு எதிரான ஊழல் புகார்களோடு மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை 2017ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி நிதிஷ் குமார் அளித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார். அதன் விளைவாக தேஜஸ்வி துணை முதல்வர் பதவியை இழந்தார். ஆனால், பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த மறுதினமே பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் அரியணையில் அமர்ந்தார் நிதிஷ் குமார். இதே நிதிஷ்தான் அதற்கு முந்தைய தேர்தலில் வாக்காளர்களை சந்தித்தபோது, நான் மண்ணுக்குள் புதைவேனே தவிர, பாஜகவுடன் மீண்டும் அணி சேர மாட்டேன் என்று முழங்கியவர்.

இதன் காரணமாகவே நிதிஷ் குமாரை சந்தர்ப்பவாதி என்று தனது அரசியல் மேடைகளில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி விமர்சித்து வந்தார். லாலு, நிதிஷ் நட்டு மலர்ந்த காலத்தில், நிதிஷை 'மாமா' என்றே பதின்ம வயதைக் கடந்திருந்த தேஜஸ்வி அழைத்து வந்தார். இப்போது வளர்ந்து முப்பது இறண்டு வயதை கடந்த நிலையில், அதே நிதிஷுக்கு எதிராக இதுநாள்வரை அரசியல் காய்களை நகர்த்தி வந்தார் தேஜஸ்வி.

இப்போது மீண்டும் தேஜ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடம்பெற்ற மகாகத்பந்தன் அணியுடன் அரசியல் உறவைக் கொண்டு புதிய ஆட்சிக்கு அடித்தளமிட்டிருக்கிறார் நிதிஷ் குமார். நிதீஷ் குமார் பீகார் மாநில முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார். அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். பக் தொகுதியிலிருந்து 6 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நிதிஷ் குமாரின் பீகார் அரசியல் : இன்ஜினியர் முதலமைச்சரான கதை | Nitish Kumar History

பீகாரின் தளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தை சரி செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டவர். ஆரம்பத்தில் பீகாரில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 1 லட்சம் பள்ளி ஆசிரியர்களை பதவியில் நியமித்தார்.

டாக்டர்கள் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றுவதை உறுதி செய்தார். பெண் கல்வி அறிவு விகிதத்தை அதிகரித்தார். அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தினார். சட்டவிரோத செயல்கள் தலைவிரித்தாடியதை கட்டுக்குள் கொண்டு வந்தார். கிரிமினல்களை வேட்டையாடினார். சராசரி பீகாரியின் வருமானத்தை இரட்டிப்பாக்கினார். என்பது குறிப்பிடத்தக்கது.