கலைஞர் கோட்டம் திறப்புவிழா : பீகார் முதலமைச்சர் திருவாரூர் பயணம் ரத்து - காரணம் என்ன?
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் கோட்டம் திறப்பு விழா
மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூரில், காட்டூர் பகுதியில் 7000 சதுர அடியில் 12 கோடி ரூபாய் செலவில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பாக கலைஞர் கோட்டம் திறக்கபட உள்ளது.
முதலமைச்சர் வரவில்லை
ஆனால், அதில் திடீர் திருப்பமாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் உடல்நிலை கருத்தில் கொண்டு அவரது திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் டெல்லி துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்வார் என கூறப்பட்டுள்ளது.
வரும் 23ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் அரசியல் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார் .