தவறான முடிவை அறிவித்த நடுவர்கள் : கடுப்பான விராட்கோலி

Virat Kohli
By Irumporai Feb 18, 2023 01:30 PM GMT
Report

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

 இந்தியா ஆஸ்திரேலியா

இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-நாள் உணவு இடைவேளை வரை 88 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து விராட் கோலி - ஜடேஜா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. விராட் கோலி 44 ரன்கள் எடுத்த போது நடுவரின் நிதின் மேனனின் சர்ச்சைக்குரிய முடிவால் ஆட்டமிழந்தார்.

மேத்யூ வீசிய 50-வது ஓவரின் மூன்றாவது பந்தில் கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனபோது இந்த சம்பவம் நடந்தது. பந்து பேட் மற்றும் பேடில் ஒரே நேரத்தில் பட்டது. எம்சிசி விதிப்படி பந்து ஒரே நேரத்தில் பேட் மற்றும் பேடில் பட்டால் நாட் அவுட் ஆகும். ஆட்டமிழந்து வெளியேறிய கோலி டிரஸ்சிங் அறையில் வைக்கப்பட்டிருந்த டிவியில் பார்க்கும் போது தான் அவுட் இல்லை என்பதை அறிந்து கோபத்தை வெளிக்காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ட்விட்டரில் நாட் அவுட் ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.