புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படுகிறதா? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்
தமிழகத்தோடு புதுச்சேரி சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக - காங்கிரஸ் இர்ய் கூட்டணியிலும் பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் ஒரு கூட்டணியிலும் தேர்தலைச் சந்திக்கின்றன. புதுச்சேரியில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்கிற முயற்சியில் பாஜக இருந்து வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர்களும் பலரும் புதுச்சேரியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் புதுச்சேரியை தமிழகத்துடன் உடன் இணைக்க வேண்டும் என்கிற ஒரு கருத்தும் இருந்து வருகிறது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். புதுச்சேரியை தமிழத்துடன் இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், “புதுச்சேரி - குமரி, புதுச்சேரி - சென்னை கடல் வழி போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும்.
சாலை போக்குவரத்து துறை மூலம் ரூ.20,000 கோடிக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில், புதுச்சேரியில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி இரட்டிப்பு வளர்ச்சி அடையும்” என்றார்.