வண்டில இத செய்வோம் கண்டிப்பாக ஒலி மாசு குறையும் : நிதின் கட்கரி அறிவிப்பால் , இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்

nitingadkari indianmusical-nstrument
By Irumporai Oct 05, 2021 08:16 AM GMT
Report

இந்தியாவில் ஏற்படும் ஒலி மாசுகளுக்கு பிரதான காரணம் வாகனங்கள் தான்.

ஒலி மாசால் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர் இதனைக் தடுக்க வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு உள்ளது.

இந்த நிலையில் அண்மையில் நாஷிக்கில் நடைபெற்ற புதிய நெடுஞ்சாலை தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இதுதொடர்பாகப் பேசியுள்ளார். அதில்:

ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களால் அதிக இரைச்சல் ஏற்படுகிறது. அதிலுள்ள சைரன் ஒலியால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவற்றை தடுக்க புதிய திட்டங்களைக் கொண்டுவரவிருக்கிறோம்.

இதில் முதற்கட்டமாக ஆம்புலன்ஸ், அமைச்சர்களின் கார் போன்றவற்றில் ஒலிக்கும் சைரனுக்கு பதில் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் புதிய இசையைப் பொருத்தவுள்ளோம். இனிமையான இந்த இசையை சைரனுக்கு பதில் ஒலிக்கவிட்டால் மக்கள் இனிமையாக உணர்வார்கள்

. அதேபோல அனைத்து வாகனங்களிலும் அதிக ஒலி எழுப்பும் வழக்கமான ஹாரன்களுக்கு பதிலாக இந்திய இசைக் கருவிகளான ஃப்ளூட், தபேலா, வயலின், மௌத் ஆர்கன், ஆர்மோனியம் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட இசையை ஹாரன்களாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அமைச்சர் , நிதின் கட்காரியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் குறிப்பாக அமைச்சர் சொன்னதுபோல இந்திய இசைகளை ஹாரன் ஒலியாக வந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக கலாய்த்துள்ளனர்

இந்தியாவில் நாளுக்கு நாள் ஒலி மசு அதிகரித்து வருகிறது அதனை தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்பதை உணர்ந்து பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கோரிக்கையாக உள்ளது.