புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் தமிழகம் 3 வது இடம் - நிதி ஆயோக்
புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இந்திய மாநிலங்களின் செயல்பாட்டை ,நிதி ஆயோக் அமைப்பு ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகம்3 ம் இடத்தை பிடித்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியல் விதிமுறைபடி 3 வகையாக பிரித்து நிதி ஆயோக் அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது.
அதோடு 2020-ம் ஆண்டுக்கான மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் சிஇஓஅமிதாப் கந்த் இதனை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் முதல் 5 மாநிலங்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கேரளா ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பிஹார் ஆகிய 3 மாநிலங்களும் பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. தற்போது வெளியான இந்த பட்டியல் மூலம் மற்ற மாநிலங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நிதி ஆயோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.