ஆபத்தான நிலையில் நித்தியானந்தா...? - அடைக்கலம் கேட்டு இலங்கைக்கு பறந்த கடிதம்... - வெளியான பகீர் தகவல்
ஆபத்தான நிலையில் நித்தியானந்தா இருப்பதாகவும், அடைக்கலம் கேட்டு இலங்கைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கைலாசா
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார். திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
சமீபத்தில் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் அது உண்மை கிடையாது என்று விளக்கமளித்தார்.
நித்தியானந்தா விளக்கம்
எனக்கு 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது, உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன்.
விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன். பக்தர்கள், சீடர்கள் மற்றும் கைலாசவாசிகள் அனைவருக்கும் வணக்கம். நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். மிக விரைவில் எனது உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்களை மேற்கொள்வேன் என்று நித்தியானந்தா என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

அடைக்கலம் கேட்டு இலங்கைக்கு பறந்த கடிதம்?
கைலாசா தீவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் நித்தியபிரேமாத்மா ஆனந்த சுவாமி, அதிபர் விக்ரசிங்கேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இலங்கை அதிபர் விக்ரமசிங்கேவுக்கு, நித்தியானந்தா தரப்பில் கடிதம் எழுதியதை இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்தனர்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது -
நித்தியானந்தா உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. நித்திக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை வேண்டும். ஆனால், கைலாசா தீவில் மருத்துவ வசதிகள் ஏதும் இல்லை. எனவே, இலங்கையில் மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கைலாசாவில் உள்ள மருத்துவர்களால் நித்தியானந்தாவிற்கு என்ன நோய் இருப்பது கண்டுபிடிக்க முடியவில்லை. விமான ஆம்புலன்ஸ் மூலம் நித்தியானந்தாவை இலங்கைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவ வேண்டும். நித்யானந்தாவின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவுகளையும், கைலாசா அரசு ஏற்றுக்கொள்ளும்.
இலங்கையுடன் ராஜாங்கரீதியான உறவை ஏற்படுத்த கைலாசா விரும்புகிறது. எங்கள் நன்றியின் வெளிப்பாடாக லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டுக்கே, மக்களின் நலனுக்காகவே தந்து விடுகிறோம். இலங்கையில் தேவையான முதலீட்டையும் நித்தியானந்தா வழங்குவார்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.