கைலாசாவில் வேலை வாய்ப்பு .. நித்யானந்தா அறிக்கையால் பரபரப்பு
பிரபல சர்ச்சை சாமியார் நித்யானந்தா தற்போது தனகென தனி நாட்டினை உருவாக்கி பரபரப்பினை ஏற்படுத்தினார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமாக இருந்ததாக தகவல் வெளியாகின.
நித்யானந்தா
ஆனால் தான் நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். மேலும் , நித்யானந்தா அவ்வப்போது பல சர்சையான அறிக்கைகளை வெளியிடுவார், அந்த வகையில் தற்போது ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
கைலாஸாவில் வேலை
அதில், இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாஸா கிளைகளில் தகுதியான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு கைலாஸ்வில் உள்ள ஐடி விங் கில் மற்றும் அயல் நாட்டு தூதரகம் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல்ஸ் பல்வேறு இடங்களில் வேலை வய்ப்பு உள்ளதாகவும் .

உணவு மருத்துவ வசதி , தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசினால் குற்றவாளியாக தேடப்படும் ஒரு சாமியார் தனது கைலாஸ்வில் வேலை உள்ளது என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    