அழைப்பு வந்துள்ளது - நித்யானந்தா அயோத்திக்கு வருகிறார்..பரபரப்பை ஏற்படுத்தும் ட்வீட்..!

Tamil nadu Nithyananda Ayodhya Ayodhya Ram Mandir
By Karthick Jan 22, 2024 04:29 AM GMT
Report

எங்கு இருக்கிறார் என்று பலரும் தெரியாமல் தேடி வரும் நித்யானந்தா அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரப்போவதாக ட்வீட் செய்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில்

சரியாக இன்று மதியம் 12:29 மணிக்கு ராமர் கோவில் பிரதிஷ்டை நடைபெறவிருக்கிறது. நாட்டின் முக்கிய பிரபலங்களும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக அயோத்தியில் முகாமிட்டிருக்கும் நிலையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அழைப்பு வந்துள்ளது - நித்யானந்தா அயோத்திக்கு வருகிறார்..பரபரப்பை ஏற்படுத்தும் ட்வீட்..! | Nithyananda Is Visiting Ayothi Ram Temple Today

இந்நிலையில், தான் இந்த கும்பாபிஷேகத்திற்கு நித்தியானந்தா வரவுள்ளதாக அவர் சார்பாக ட்வீட் செய்யப்பட்டள்ளது. பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2010 ஆண்டு கைது செய்யப்பட்ட நித்யானந்தா, பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அழைப்பு வந்துள்ளது - நித்யானந்தா அயோத்திக்கு வருகிறார்..பரபரப்பை ஏற்படுத்தும் ட்வீட்..! | Nithyananda Is Visiting Ayothi Ram Temple Today

அதனை தொடர்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் அவரின் இருப்பிடம் பற்றிய தகவல் கிடைக்கப்பெறவில்லை.

கலந்து கொள்ளும் நித்தி

ஆனால், தன்னிச்சையாக கைலாச என்ற நாட்டை நிறுவி, அங்கிருந்த பல வீடியோ, புகைப்படம், ட்வீட் போன்றவற்றை நித்தியானந்தா சார்பில் வெளியிடப்பட்டு வரப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நித்யானந்தா, கலந்து கொள்வது குறித்து வெளியிடப்பட்டுள்ள ட்வீட்டில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தவறவிடாதீர்கள். பிரான பிரதிஷ்டை மூலம் ராமர் கோவிலின் கருவறைக்கு பாரம்பரிய முறைப்படி அழைக்கப்படுகிறார். அவர் ஒட்டு மொத்த உலகிற்கும் ஆசி வழங்க இருக்கிறார். முறையாக அழைக்கப்பட்டதன் பேரில், இந்து மதத்தின் பகவான், ஸ்ரீ நித்யானந்தா இந்த பிரமான்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்," என குறிப்பிட்டுள்ளார்.