கோமா நிலைக்கு சென்ற நித்தி... சிஷ்யைகள் போடும் மாஸ்டர் பிளான்... கைலாசாவில் நடப்பது என்ன?

Nithyananda
By Petchi Avudaiappan May 30, 2022 07:42 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சாமியார் நித்தியானந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கோமா நிலைக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா சர்ச்சை வீடியோ ஒன்றில் சிக்கினார். அதனைத் தொடர்ந்து பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் பிரபலமான நித்தி கைலாசா என்ற இந்துக்களுக்கான தனி நாட்டை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார். அதன்பின் கடந்த 2 ஆண்டுகளாக அங்கிருந்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.

இதனிடையே அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட வீடியோக்களைத்தான் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆனால் தான் உயிரோடு இருப்பதாக நித்தி கடிதம் மூலம் விளக்கியிருந்தார். இந்நிலையில் அவர் கோமா நிலைக்கு சென்று இருப்பதாகவும் செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பதினைந்து நாட்களாக நித்தியானந்தா படுத்த படுக்கையாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுவாமி நித்தியானந்தா முழுக்க முழுக்க சமாதி நிலைக்கு சென்றுள்ளதாகவும், பக்தர்கள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்யும்படி கைலாசா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாததால் நித்தியானந்தா பக்தர்கள் குழப்பமடைந்துள்ளனர். அதேசமயம் மத்திய அரசின் அனுமதியோடு நித்யானந்தா இந்தியா வர விரும்புவதாகவும் இதற்கான நடவடிக்கைகளை அவரது சீடர்கள் சிலர் மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.