வெளிநாட்டில் நித்யானந்தா சீடர்கள் கைது - என்ன காரணம்?
வெளிநாட்டில் நித்யானந்தாவின் சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நில அபகரிப்பு
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார்.
பின் நடிகை ஒருவருடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்ட நிலையில், தலைமறைவானார்.
அதனையடுத்து திடீரென கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அது இந்துக்களுக்கான நாடு, தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
சீடர்கள் கைது
இந்நிலையில், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில், பழங்குடியினரின் பல ஏக்கர் நிலத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு நித்யானந்தா ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு சென்ற நித்யானந்தா சீடர்கள், ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையறிந்த அந்நாட்டு அரசு பழங்குடியின மக்களின் நிலத்தை நித்யானந்தா அபகரிக்க முயன்றதாகக் கூறி, ஒப்பந்தம் செல்லாது என அறிவித்தது. மேலும், அங்கு தங்கி இருந்த நித்யானந்தா சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 12 பேர் சீனர்கள், 5 முதல் 7 பேர் இந்தியர்கள், மற்றவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
தற்போது குறிப்பாக ழங்குடியினரிடம் இருந்து ஆக்கிரமித்த நிலத்தைத்தான், கைலாசா என்று நித்யானந்தா கூறி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.