இயக்குநர் பேரரசுவுக்கு 'கைலாசா தர்ம ரட்சகர்’ விருது வழங்கிய நித்தியானந்தா - வைரலாகும் வீடியோ
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குநர் பேரரசுவுக்கு 'கைலாசா தர்ம ரட்சகர்’ விருதை நித்தியானந்தா வழங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பேரரசு
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பேரரசு. இவர் இயக்கத்தில் வெளியான ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’, ‘தர்மபுரி’, ‘திருவண்ணாமலை’ உள்பட பல படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, வசூலை வாரியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் பேரரசு படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாகவே இருக்கும்.
‘தர்மத்தின் பாதுகாவலர்’ விருது
இந்நிலையில், பிரபல ஆன்மீகவாதியான நித்தியானந்தா இயக்குனர் பேரரசுக்கு ‘தர்மத்தின் பாதுகாவலர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ‘ஸ்ரீ கைலாசா தன்னாட்சி மாநிலம்’ என அவர் தற்போது இருக்கும் நாட்டிற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
கைலாச நாட்டின் ‘தர்ம ரட்சகர்’ அதாவது தர்மத்தின் பாதுகாவலர் விருது என்று குறிப்பிட்டு இருக்கிறது.
பேரரசுவுக்கு நித்தியானந்தா விருது வழங்கியுள்ள விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.