ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்த நித்யானந்தாவின் 8 சாதனைகள் - வெளியான தகவலால் பரபரப்பு!

Nithyananda Viral Photos
By Nandhini Oct 31, 2022 06:44 AM GMT
Report

ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்டில் நித்யானந்தாவின் 8 சாதனைகள் இடம் பெற்றிருப்பதாக கைலாசாவிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

நித்தியானந்தாவின் கைலாசா

பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார். திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சமீபத்தில் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் அது உண்மை கிடையாது என்று விளக்கமளித்தார்.

‘தர்மத்தின் பாதுகாவலர்’ விருது

சமீபத்தில் பிரபல ஆன்மீகவாதியான நித்தியானந்தா, இயக்குனர் பேரரசுக்கு ‘தர்மத்தின் பாதுகாவலர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.

இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதில், ‘ஸ்ரீ கைலாசா தன்னாட்சி மாநிலம்’ என அவர் தற்போது இருக்கும் நாட்டிற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

கைலாச நாட்டின் ‘தர்ம ரட்சகர்’ அதாவது தர்மத்தின் பாதுகாவலர் விருது என்று குறிப்பிடப்பட்டது. பேரரசுவுக்கு நித்தியானந்தா விருது வழங்கியுள்ள விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது.

nithyananda-asia-book-of-records

ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்

இந்நிலையில், கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்திருப்பதாகவும், அவை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கைலாசா தனது டுவிட்டர் பக்கதில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், ஜூலை 30, 2022 மற்றும் செப்டம்பர் 13, 2022 ஆகிய தேதிகளில் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வழங்கப்படுவதில் கைலாசா மகிழ்ச்சியடைகிறது மற்றும் மிகவும் பெருமையடைகிறது. எஸ்.பி.எ.ச் நித்யானந்த பரமசிவம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் பக்கங்களில் ஒரு அற்புதமான சாதனையைப் படைத்துள்ளார் என்று பதிவிட்டுள்ளது

அதாவது ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் வாசித்து, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது. தனி ஒருவரின் அதிகபட்ச புத்தகங்கள் (1,123 புத்தகங்கள்), அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், அதிகபட்ச பிரமோற்சவங்கள், அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது (7,407 தலைப்புகளில் 289,928 மணி நேரம்) உள்ளிட்ட 8 சாதனைகளை நித்யானந்தா படைத்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.