நித்தியானந்தா உயிரிழந்துவிட்டாரா? வெளியான முகநூல் பதிவால் பக்தர்கள் அதிர்ச்சி
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார்.
கைலாசா
திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
சமீபத்தில் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் அது உண்மை கிடையாது என்று விளக்கமளித்தார்.
நித்தியானந்தா விளக்கம்
எனக்கு 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது, உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன். பக்தர்கள், சீடர்கள் மற்றும் கைலாசவாசிகள் அனைவருக்கும் வணக்கம். நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். மிக விரைவில் எனது உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்களை மேற்கொள்வேன் என்று நித்தியானந்தா என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்தியா திரும்புவதாக தகவல்?
இந்நிலையில், நித்தியானந்தா மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 14-ம் தேதி பவுர்ணமி வருகிறது. அதற்கு முன்பு நித்தியானந்தா திருவண்ணாமலைக்கு வருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது.
நித்தியானந்தா இறந்து விட்டாரா?
உயிரோடு இருக்கும் ஒருவரை இதுவரை யாரும் சிலை வைத்து தெய்வமாக வழிபட்டது கிடையாது. ஆனால், நித்யானந்தாவின் உற்சவர் சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் நித்தியானந்தா இறந்துவிட்டாரா? அல்லது ஜீவசமாதி ஆகிவிட்டரா? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். திடீரென்று நித்யானந்தேஷ்வரா இந்து கோயில் என்று பெயரும் வைத்துள்ளனர்.
மேலும், சமாதியில் இருப்பதாக கூறி வந்த நித்யானந்தா ஜீவசமாதியாகி, அதன் பின்பே இந்த கோயில் வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.
நித்தியானந்தா உயிரிழந்த தகவலை அறிவித்தால், அவர்களின் பக்தர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதால், இது போன்ற சமிக்ஞை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், கைலாசாவிலிருந்து எந்தவிதமான உறுதியான தகவல் வெளியாகவில்லை.