நான் சமாதி ஆகிவிட்டேன்... எதிரிகள் என்னை தூற்றினால் அழிந்து விடுவார்கள்.... - பகீர் கிளப்பிய நித்தியானந்தா

Nithyananda
By Nandhini May 26, 2022 10:26 AM GMT
Report

பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார்.

திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

நித்தியானந்தா இருக்கும் இடத்தை யாராலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ரகசியமாகவே உள்ளது. அடிக்கடி நித்தியானந்தாவின் பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அடிக்கடி வீடியோக்களில் நித்தியானந்தா பேசி வந்த நிலையில், திடீரென்று அவரின் வீடியோக்கள் எதுவும் வெளிவரவில்லை. அவர் இறந்து விட்டதாக தகவல்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவின. 

இதனையடுத்து, சமீபத்தில் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் அது உண்மை கிடையாது என்று விளக்கமளித்தார்.

எனக்கு 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது, உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் நித்தியானந்தா ஒரு பகீர் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

அந்தச் செய்தியில் கூறியிருப்பதாவது -

சமாதியில் உண்மையான அர்த்தம் என்னவென்றால் சம+ஆதி. அனைத்தும் சமநிலையை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும். வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களும் சமமாக இருக்க வேண்டும்.

இதன் பொருள் என்னவென்றால் உடலில் தேங்கி உள்ள கொழுப்பு மற்றும் ஜீரணமாகாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது. உடல் முற்றிலும் நச்சு தன்மை பெறுகிறது. அதனால் தான் வெளிப்புற உணவு இல்லை. அல்லது வழக்கமான தூக்கம் இல்லாமல் இருக்கிறேன்.

நான் இந்த சமாதி நிலையில் இருக்கும்போது மக்கள் என்ன வரம் கேட்டாலும், பிராத்தனைகள், விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடமிருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும்.

நான் சமாதியில் இருக்கும்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளே இருந்து கொண்டே பதில் அளிக்கப்படுகிறது. நான் அனைவரிலும் ஒன்றாக கலந்துவிட்டேன்.

நான் சமாதியில் இருக்கும்போது வெறுப்பாளர்கள், எதிரிகள் என்னை தூற்றுவதற்கு சக்தியை இழந்துவிடுவார்கள்.

ஒவ்வொருவரின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப நான் ஒவ்வொவருராக பார்க்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

நான் சமாதி ஆகிவிட்டேன்... எதிரிகள் என்னை தூற்றினால் அழிந்து விடுவார்கள்.... - பகீர் கிளப்பிய நித்தியானந்தா | Nithyananda