எனக்கு பணமெல்லாம் அனுப்பாதீங்க... அந்த மாதிரி செல்பி மட்டும் அனுப்புங்க... - நித்தியானந்தாவால் பரபரப்பு
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார்.
திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நித்தியானந்தா இருக்கும் இடத்தை யாராலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ரகசியமாகவே உள்ளது. அடிக்கடி நித்தியானந்தாவின் பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வீடியோக்களில் அவர் ஆன்மீக சொற்பொழிகள் ஆற்றி வருவார். கைலாசா நாடு அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் நித்யானந்தா உருவாக்கி இருக்கிறார் என்றும், இல்லை.. அவர் இந்தியாவிலேயே தான் இருந்து கொண்டு பேசுகிறார் என்றும் வதந்திகள் பரவின.
அடிக்கடி வீடியோக்களில் நித்தியானந்தா பேசி வந்த நிலையில், திடீரென்று அவரின் வீடியோக்கள் எதுவும் வெளிவராததால் என்ன என்று பலரும் விசாரித்த போது தான் அவர் உடல் நிலை அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
இதனையடுத்து, சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் அது உண்மை கிடையாது என்று விளக்கமளித்தார்.
எனக்கு 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது, உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
சமூகவலைத்தளங்களில் பக்தர்கள் நித்தியானந்தாவிற்கு என்ன ஆயிற்று. இவ்வளவு பிரச்சினை இல்லை என்று சொன்னாலும், உடல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறாரே.. உண்மையில் அவருக்கு என்னவாயிற்று என்று பக்தர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது நித்தியானந்தாவின் புதிய பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், தனது உடல்நிலை சரியில்லாத தகவல் வெளியான நாளிலிருந்து நிறைய பணம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தயவு செய்து பணம் அனுப்பவதை நிறுத்தி விடுங்கள்.
பணத்திற்கு பதிலாக அருணகிரி யோகீஸ்வரர் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். விளக்கு ஏற்றும் படத்தை செல்பி எடுத்து பதிவிடுமாறும் வலியுறுத்தியுள்ளார் நித்தியானந்தா.
இந்த பதிவை பார்த்த அவரது பக்தர்கள் ஏராளமானோர் நித்யானந்தா பக்தைகள் விளக்கு ஏற்றி அதன் செல்பியையும் எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.