நித்தியானந்தா ஆசிரமத்திற்கு நன்கொடையாக வந்த பல கோடி அமெரிக்க டாலர்கள் - வெளியான திடுக்கிடும் தகவல்
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார். திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நித்தியானந்தா இருக்கும் இடத்தை யாராலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ரகசியமாகவே உள்ளது. அடிக்கடி நித்தியானந்தாவின் பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வீடியோக்களில் அவர் ஆன்மீக சொற்பொழிகள் ஆற்றி வருவார். கைலாசா நாடு அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் நித்யானந்தா உருவாக்கி இருக்கிறார் என்றும், இல்லை.. அவர் இந்தியாவிலேயே தான் இருந்து கொண்டு பேசுகிறார் என்றும் வதந்திகள் பரவின.
அடிக்கடி வீடியோக்களில் நித்தியானந்தா பேசி வந்த நிலையில், திடீரென்று அவரின் வீடியோக்கள் எதுவும் வெளிவராததால் என்ன என்று பலரும் விசாரித்த போது தான் அவர் உடல் நிலை அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
இதனையடுத்து, சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் விளக்கமளித்தார்.
27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை.
மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக்கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன்.
விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்று அந்த கடிதத்தில் நான் சொல்வதெல்லாம் உண்மை என்ற தலைப்பில் கீழே சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் பக்தர்கள் நித்தியானந்தாவிற்கு என்ன ஆயிற்று. இவ்வளவு பிரச்சினை இல்லை என்று சொன்னாலும், உடல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறாரே.. உண்மையில் அவருக்கு என்னவாயிற்று என்று பக்தர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நித்தியானந்தா ஆசிரமத்திற்கு பல கோடி அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஏற்பட்ட பிரச்னைதான் இந்த சமாதிநிலை நாடகமெல்லாம் என்று நித்தியானந்தாவுக்கு நெருக்கமாக இருந்து பிரிந்தவர்களிடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பல கோடி அமெரிக்க டாலர் பணத்தை தங்கக் கட்டிகளாக மாற்றிக் கொண்டார். மேலும், துபாய், இஸ்தான்புல் வழியாக பெருமளவில் இந்தத் தங்கக் கட்டிகள் கரீபிய தீவு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சர்வதேச வங்கியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது.
அந்த வங்கிக் கணக்கின் பாதுகாவலர்களாக, அமெரிக்காவைச் சேர்ந்த தன் சீடர்கள் இருவரை நியமித்த நித்தியானந்தா, மாதம் ஒருமுறை அந்த தங்கக் கட்டிகளை ஆய்வு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அவர்கள் மூலமாகத்தான் கைலாசாவை சில ஆப்பரிக்க நாடுகள் அங்கீகரிப்பதற்கு உண்டான வேலைகள் நடந்தன என்று அவரிடமிருந்து பிரிந்து வந்த சீடர்களிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளன.