டீச்சராக மாறிய பிரபல நடிகை : வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யாமேனன் ,இந்த நிலையில் அவர் தற்போது ஆசிரியராக மாறிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நித்யாமேனன்
திருச்சிறம்பலம் படத்தின் மூலமாக மீண்டும் பிரபலமான நித்யாமேனன் தற்போது ஆரம் திருகல்பனா என்ற மலையாளப்படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.
வைரலாகும் வீடியோ
இந்த படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பின் இடைவெளியில் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற நித்யா மேனன், அங்கு இருந்த வகுப்பு சென்று பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் பாடம் நடித்தினார்.
இந்த வீடியோ நித்யா மேனன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட தற்போது வைரலாகி வருகின்றது.