தாடி பாலாஜி மனைவினு போடாதீங்க..நானும் பிரபலம்தான் - நித்யா ஆவேசம்!
தாடி பாலாஜியின் மனைவி என ஏன் அழைக்கிறீர்கள், நானும் பிரபலம்தான் என நித்யா தெரிவித்துள்ளார்.
அடிக்கடி பிரச்னை
தாடி பாலாஜி மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனிதனியே வசித்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நித்யா அவ்வப்போது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில், சென்னையை அடுத்த மாதவரத்தில் நித்யா வசித்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்னை இருந்துள்ளது. இதனால் தனது காரை நித்யா கற்கள் வீசி சேதப்படுத்தியதாக ஆசிரியர் புகார் கொடுத்தார்.
புகார்
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நித்யா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமா படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு சென்ற போது கீழே விழுந்த சாவியை தேடினேன். அதை அவர்கள் கற்களை தேடுவதாக நினைத்து கொண்டு என் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர். என்னதான் சிங்கிள் பெண்ணாக இருந்து போராடினாலும், நமக்கு பின்னாடி நிறைய தலைப்புகள் வைக்கிறார்கள்.
நாட்டுக்கு சேவையாற்ற நான் பாஜகவில் இணைய உள்ளேன். தாடி பாலாஜியின் மனைவி என என்னை குறிப்பிடாதீர்கள். நானும் ஃபேமஸ்தான் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.