வாழ்க்கையில் பயணம் ரொம்ப முக்கியம் : கதைகள் சொல்லும் நித்தம் ஒரு வானம்
எதிலும் 100% சுத்தம் சுகாதாரம் என்ற OCD பிரச்சனையுடன் வாழும் அர்ஜூனுக்கு (அசோக் செல்வன்) திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்கு முதல் நாள் இரவு முன்னாள் காதலன் பற்றி பேசும் மணப்பெண்ணிடம் பிராக்டிகலாக சொல்வதாக கூறி பேசும் அவருடைய பேச்சுக்கள் திருமணம் நின்று போக காரணமாக மாறி போகின்றது.
இவரது மனக்குறையினை போக்க வரும் டாக்டரான அபிராமி இருகாதல் கதைகள் அடங்கிய டைரிகளை கொடுக்கின்றார் ஆனால் அந்த டைரிகளின் இரண்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளது , கிழிந்து போன அந்த டைரியின் காதலை தேடி செல்லும் அர்ஜூன் அதன் மூலம் என்ன கற்றுக்கொண்டார் என்பதுதான் நித்தம் ஒரு வானம் காட்டும் சொல்லும் பதில்.
3 விதமான கதைகள், கதைக்களங்களை கையாளும் போது எப்போதும் ரசிகர்களை கைபிடித்து செல்லும்மாறு கதை இருக்க வேண்டும் , அதனை இந்த படம் பூர்த்தி செய்கின்றது குழப்பத்தில் ஆழ்த்தும் பல கதாபாத்திரங்களை எளிதாக புரிய வைத்துள்ளார் இயக்குநர் ரா. கார்த்திக் .
வாழ்க்கையில் துவண்டு போன தருணத்தில், நம்மை விடுவிக்கும் ஒரே மருந்து பயணம் , இந்த் பயணத்தில் நாம் பார்க்கும் மனிதர்கள் அவர்களின் வாழ்க்கை இவற்றையெல்லாம் பார்க்கும்போது நம் பிரச்சினையெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதை உணர்த்தியுள்ளது இந்த படம்.
வீரா- மீனாட்சி, பிரபா - மதி, அர்ஜூன் - சுபா கதைகளில் வரும் அத்தனை காதாபாத்திரங்களும் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளது படத்தின் சில இடங்களில் தொய்ப்வாக தோன்றினாலும் படத்தின் இறுதி காட்சி சூப்பர் என்ற மன நிறைவினை கொடுக்கின்றது.
ஒட்டுமொத்தமாக நித்தம் ஒரு வானம் : கதைகளின் வசந்தம்