ரன்பீர்-பில் கேட்ஸ்; யாருடன் டின்னர் சாப்பிடுவீர்கள்? நீடா அம்பானி கொடுத்த நச் பதில்!

Narendra Modi Bill Gates Mukesh Dhirubhai Ambani Ranbir Kapoor Nita Ambani
By Sumathi Feb 20, 2025 11:56 AM GMT
Report

 பில் கேட்ஸ் - ரன்பீர் கபூர் குறித்த கேள்விக்கு நீடா அம்பானி அளித்துள்ள பதில் கவனம் பெற்றுள்ளது.

பில் கேட்ஸ் - ரன்பீர் கபூர்?

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2025 இந்திய மாநாட்டில் கலந்துக்கொண்டார்.

nita ambani with ranbir kapoor

அப்போது அங்கு நடந்த கலந்துரையாடலில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அப்போது உலக பணக்காரர் பில் கேட்ஸ் அல்லது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஆகிய இருவரில் யாருடன் இரவு உணவு சாப்பிடுவீர்கள்? என்று கேட்கப்பட்டது.

இந்தியாவில் அமையும் முதல் தனியார் தங்க சுரங்கம் - இனி தங்கம் விலை குறையுமா?

இந்தியாவில் அமையும் முதல் தனியார் தங்க சுரங்கம் - இனி தங்கம் விலை குறையுமா?

நீடா அம்பானி பதில்

இதற்கு "ரன்பீர், ஏனென்றால் என் மகன் ஆகாஷ் மிகவும் சந்தோஷப் படுவான்- ரன்வீர் ஆகாஷின் சிறந்த நண்பர்" என்று பதிலளித்தார்.

மேலும், கணவர் முகேஷ் அம்பானி அல்லது பிரதமர் மோடி, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டதற்கு, மோடி நாட்டுக்கு சிறந்தவர், முகேஷ் வீட்டுக்கு சிறந்தவர் எனக் கூறினார்.