யாஷிகா...அபிராமி...யுடன் காதலில் விழுந்த நிரூப் - கடைசியில் என்ன தான் ஆனது?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர் நிரூப் தனக்கும் சக போட்டியாளரான நடிகை அபிராமிக்கும் இடையிலான உறவு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளர்களிள் ஒருவர் நிரூப் நடிகை யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் ஆவார். இதனை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வெளிப்படையாக சொன்ன அவர் அந்த காதல் பிரிந்ததற்கான காரணத்தையும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள யாஷிகா செய்த உதவியையும் ஒளிவுமறைவு இல்லாமல் பேசி வருகிறார்.
இதனிடையே தற்போது பிக்பாஸ் தமிழ் ஓடிடி நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் நிரூப் மீண்டும் கலந்து கொண்டுள்ளார். அதேபோல் முந்தைய சீசனில் கலந்து கொண்ட நடிகை அபிராமியும் பங்கேற்றுள்ளார். ஓடிடி என்பதால் சென்சார் கட் கூட இன்றி உள்ளது உள்ளபடி பார்க்க முடியும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியில் வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே 5வது சீசனில் நிரூப் யாஷிகா உடனான காதலைப் பற்றி சொன்னதும் அவர் நடிகை அபிராமியுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் உள்ளே சென்றதுமே, தானும் அபிராமியும் காதலித்த உண்மையை நிரூப் வெளிப்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கிய நிலையில் அபிராமியை நாமினேட் செய்த நிரூப், அபிராமியும் நானும் கொஞ்ச வருடம் முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். ஆனால் நான் அப்போது பார்த்த அபிராமி இவர் இல்லை. அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது.? ஏன் இந்த மாற்றம்? என தெரியவில்லை. ஆனால் நான் பழகிய அபிராமிக்கும், இப்போது உள்ளே பார்க்கும் அபிராமிக்கும் சம்மந்தமில்லை. வேறு யாரையோ பார்ப்பது போல் உள்ளது என அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.