நடிகை யாஷிகா ஆனந்துடன் விவாகரத்தா? - ரசிகரின் கேள்வியால் ஆடிப்போன நிரூப்
நேரலையில் உரையாடிய போது பிக்பாஸ் போட்டியாளர் நிரூப்பிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜூ தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் ஜனவரி 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
இதில் முந்தைய சீசனில் கலந்து கொண்டு வெற்றிப் பெறாத போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே நடந்து முடிந்த 5வது சீசனில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னால் வெளியேறிய நிரூப் தன் ரசிகர்களிடம் நேரலையில் உரையாடியானார்.
அப்போது ரசிகர் ஒருவர் யாஷிகா ஆனந்த் உடனான காதல் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியைப் பார்த்து நிரூப் ஷாக்காகி தான் போனார் என்றே சொல்லலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, அதன் பிறகான பேட்டிகளிலும் நிரூப் யாஷிகா ஆனந்துடனான காதலையும், அது பிரிந்ததற்கான காரணத்தையும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள யாஷிகா செய்த உதவியையும் ஒளிவுமறைவு இல்லாமல் பேசி வருகிறார். நேரலையிலும் அதனை தெரிவிக்க அந்த ரசிகரோ பிறகு ஏன் யாஷிகாவை விவாகரத்து செய்தீர்கள்? என பதில் கேள்வி கேட்டார்.
அதற்கு நிரூப் சற்றே அதிர்ச்சியடைந்து புன்சிரிப்போடு யாஷிகாவை விவகாரத்து பண்ணேனா?.. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஒரு கட்டத்துக்கு மேல் பிரியாமல் இருந்தால் கஷ்டப்படுவோம் என உணர்ந்து பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்ததாக தெரிவித்தார்.