நிதியமைச்சரை விமர்சித்த வினோதினி.. உள்ளே தூக்கி வச்சிட்டா : வைரலாகும் வீடியோ

Smt Nirmala Sitharaman Viral Video
By Irumporai Nov 15, 2022 07:25 AM GMT
Report

தமிழ் சினைமாவில் குணசித்திர நடிகையாக வலம் வரும் நடிகை விநோதினி . சில நாட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றை விமர்சித்து நகைச்சுவையாக ஒரு பதிவினை வெளியிட்டார்.

அந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் தற்போது புதிதாக ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரெய்டு வருமா

அதில் நடிகை விநோதினி தனது தந்தையிடம் அப்பா நான் டாலர் ரூபாய் வீழ்ச்சி.. தேங்காய் சட்னி ஊசிப்போச்சுன்னாங்கிற வீடியோ போட்டேன்ல அது டிரெண்டாகிடுச்சு ப்பா.. ஏதாவது பின் விளைவு வருமாம்மா என அப்பா கேட்க.. பின் விளைவுன்னா ரெய்டு வந்துட்டா.. ரெய்டு வந்தா நாம என்ன கொடைக்கானல்ல இருக்கிற காட்டு பங்களாவையா காட்ட முடியும்.. கழுத்துல இருக்கிற செயினை உள்ளே போடுப்பா என கொஞ்சம் சட்டயர் செய்கின்றார்.

மீண்டும் வைரல்

மேலும் ஒரு வேளை உள்ளே போட்டுட்டா எனனப்பா பண்ணுவ என கேட்க , அதற்கு அவர் நான் இன்னொரு மேரேஜ் பண்ணி சந்தோஷமாக இருப்பேன்னு என ஜோக் அடிக்கின்றார் .

நிதியமைச்சரை விமர்சித்த வினோதினி.. உள்ளே தூக்கி வச்சிட்டா : வைரலாகும் வீடியோ | Nirmala Sitharaman Trending Vinothini

அவரது அப்பா, அப்பா என்னைய உள்ளே போட்டுட்டா என்ன பண்ணுவன்னு கேட்டேன் என விநோதினி தலையில் அடித்து கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.