தொடர்ந்து தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் மத்திய நிதி அமைச்சர்-கனிமொழி எம்.பி. கண்டனம்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் கல்வி தரம் குறைவாக இருப்பதாகக் கூறியதைக் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் கல்வி தரம் கொரோனாவிற்கு பிறகு பின் தங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
குறிப்பாக 3ம் வகுப்பு மாணவர்களால் 1ம் வகுப்பு பாட புத்தகத்தைப் படிக்க முடியவில்லை என்றும் பேசி இருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
கனிமொழி
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி. பாஜக அரசு, தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது. நேற்று தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழிவுப்படுத்தப்பட்டனர் எனக் கூறினார்.
ஒவ்வொரு நாளும், அமைச்சர்கள் தங்களின் கருத்தால், வெவ்வேறு மாநில மக்களை இழிவு செய்வதைப் பார்க்கிறோம். குறிப்பாக பாஜக ஆளாத மாநில மக்களை இழிவு செய்கிறார்கள். இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்று கூறினார். தற்பொழுது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.