🔴LIVE பட்ஜெட் 2023: ரூ.20 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க மத்திய அரசு இலக்கு - நிர்மலா சீதாராமன்

Smt Nirmala Sitharaman Government Of India
By Thahir Feb 01, 2023 05:30 AM GMT
Report

2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் 

இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது அவர் தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் இதுவாகும். 

nirmala-sitharaman-presented-the-union-budget

பட்ஜெட்டில் இடம்பெற்று வரும் அறிவிப்புகள் 

அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட் இது, இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றது.

🔴LIVE பட்ஜெட் 2023: ரூ.20 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க மத்திய அரசு இலக்கு - நிர்மலா சீதாராமன் | Nirmala Sitharaman Presented The Union Budget

சுதந்திரத்தின் 75வது ஆண்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டுகள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட் ஆக இது அமையும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன.     

பிரதமர் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் 2.2 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார தரவரிசையில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அமைந்துள்ளது - நிர்மலா சீதாராமன் 

 அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி அமைக்கப்படும் என அறிவிப்பு.

பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல் ஆகியவற்றுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்து தாவு தளம் உருவாக்கப்படும்.

சிறுதானிய உற்பத்தியில் இந்தியாவை, உலகளவிலான உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை.

உணவு ( ஸ்ரீ அண்ணா) உற்பத்தியில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது. 

தோட்டக்கலைத்துறைக்கு ரூ.2, 200 கோடி ஒதுக்கீடு.

ரூ.20 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது பட்ஜெட்டில் அறிவிப்பு.

இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நுாலகம் உருவாக்கப்படும். 

ஐசிஎம்ஆர் ஆய்வு நிறுவனங்களை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிப்பு. 

பழங்குடியின குழந்தைகளுகான ஏகலைவா பள்ளித் திட்டம் மேம்படுத்தப்படும் என அறிவிப்பு. 

ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு. 

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு 2013 - 14 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 9 மடங்கு அதிகம்.

 வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதி, விவசாயிகளுக்காக கர்நாடகாவுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி.

 நாட்டில் உள்ள முக்கிய நகரங்களின் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.10,000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

உணவு பாதுகாப்பு, விவசாயிகள் பாதுகாப்பு குறித்து இந்தியா அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது - நிர்மலா சீதாராமன்