பெட்ரோல் டீசல் விலை உயர்வு எனக்கே சங்கடமாகத்தான் இருக்கு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
india
price
diesel
By Jon
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனக்கும் தர்மசங்கடமாகத்தான் உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் விலை குறித்து பேசினார். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனக்கும் தர்மசங்கடமாகத்தான் உள்ளது.
விலை உயர்வை குறைக்க வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும்.
நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே. என்னால் மட்டுமே முடிவு செய்ய முடியாது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயம் செய்கின்றன என்றார்.