மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சென்னை வருகை ரத்து - என்ன காரணம்?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று உள்ள பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அக்கட்சி சார்பில், டிஜிட்டல் முறையில் பிரசாரம் மேற்கொள்ள எல்.இ.டி., திரையுடன் கூடிய வேன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
அந்த வேனில், அதிவிரைவு தொலைதொடர்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் எந்த இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்தாலும் எல்.இ.டி., திரையில் உடனே ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று மதியம் தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், திடீரென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.