‘சொத்துக்கள் குத்தகைக்கு விடப்படும்’ - மத்திய அரசின் அதிரடி முடிவு
அரசுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விட்டு ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெறும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று மத்திய அரசு மிகப்பெரிய அளவில் திட்டம் ஒன்றை தீட்டி வருகிறது. இதற்கு பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என்பதால் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மின் பகிர்மானம் வசமுள்ள பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்று பணமாக்குவதன் மூலம் ரூ.6 லட்சம் கோடியை மத்திய அரசாங்கம் திரட்டப் போவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிதி நாடு முழுவதும் மேம்பாலங்கள், தேசிய நெடுஞ்சாலை, மொபைல் டவர்கள், ரயில் நிலையங்கள் என நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் வலிமை சேர்க்கும் திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தொடங்கி வைத்துள்ளார்.