இந்திய ரூபாய் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை...! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

Smt Nirmala Sitharaman India
By Nandhini Oct 16, 2022 06:56 AM GMT
Report

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து மத்திய நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அரிசி, கோதுமை, தயிர் விலை உயர்வு

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு, உள்ளிருப்பு, வெளியிருப்பு கண்டன போராட்டங்கள் நடத்தினர்.

அதிக வரி செலுத்த வேண்டும்

இதன் பின்பு, மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

2 நாட்களுக்கு முன்பு, எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தெரிவித்தார்.

nirmala-sitharaman-india

நிர்மலா சீதாராமன் கருத்து

இந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து மத்திய நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்திய ரூபாய் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாகவே நான் பார்க்கிறேன். டாலரின் மதிப்பு உயர்ந்துவரும் நிலையில், பல வளரும் நாடுகளின் நாணயங்களை விட, இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன் என்றார்.