இந்தியாவில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Smt Nirmala Sitharaman
By Nandhini Oct 12, 2022 08:13 AM GMT
Report

இந்தியாவில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அரிசி, கோதுமை, தயிர் விலை உயர்வு

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு, உள்ளிருப்பு, வெளியிருப்பு கண்டன போராட்டங்கள் நடத்தினர்.

அதிக வரி செலுத்த வேண்டும்

இதன் பின்பு, மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

Nirmala Sitharaman

உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறது என்று தெரிவித்தார்.