உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சர்வதேச ஃபோர்ப்ஸ் இதழ் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
போர்ப்ஸ் (Forbes)பத்திரிகை நிர்மலா சீதாராமனை 'உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்' பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சேர்த்துள்ளதன் மூலம் இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி என்ற பெருமையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெல்லனைப் பின்னுக்குத் தள்ளி, இந்த முறை பட்டியலில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸ் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் நைக்கா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பால்குனி நாயரை 88வது இடத்தில் சேர்த்துள்ளது.
சமீபத்தில் நைக்கா பங்குச் சந்தையில் களமிறங்கிய பிறகு, ஃபால்குனி நாயர் இந்தியாவின் ஏழாவது பெண் பில்லியனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சர் சீதாராமன் மற்றும் ஃபால்குனி நாயர் தவிர, இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு பெண்மணியையும் ஃபோர்ப்ஸ் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.
எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவி ரோஷ்னி நாடார் இந்தப் பட்டியலில் 52வது இடத்தைப் பிடித்துள்ளார்.ரோஷ்னி நாடார் நாட்டின் மிக முக்கிய ஐ.டி நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி ஆவார்.
இதனுடன், பயோகான் நிறுவனர் மற்றும் செயல் தலைவரான கிரண் மசூம்தார் ஷாவும் போர்ப்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 72வது இடத்தில் உள்ளார்.
'உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்' பட்டியலில் மெக்கென்சி ஸ்காட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
ஸ்காட் உலகின் இரண்டாவது பணக்காரர் மற்றும் அமேசான் குழுமத்தின் உரிமையாளர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
2019-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸ் உள்ளார்.