முக ஸ்டாலினுக்கு தமிழில் வாழ்த்து கூறிய நிர்மலா சீதாராமன்

nirmala sitharaman
By Fathima May 02, 2021 11:22 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக-வின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதால், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 153 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

எனவே அடுத்த முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, இதனையடுத்து பிரபலங்கள் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், திரு. @mkstalin அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தமிழில் டுவிட் செய்துள்ளார்.