டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் கிடையாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அரிசி, கோதுமை, தயிர் விலை உயர்வு
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் அமளி
நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்ற மேலவையில் பணவீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வு பற்றி அவையின் மைய பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளிருப்பு, வெளியிருப்பு கண்டன போராட்டங்கள் நடத்தினர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தது. அதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை இலவசமாக இருப்பதன் மூலம் மக்கள் அதனை அதிகம் பயன்படுத்த முன்வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.