இந்திய பொருளாதாரம் நன்றாக உயர்ந்து வருகிறது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Smt Nirmala Sitharaman
By Nandhini May 09, 2022 05:04 AM GMT
Report

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சமீபத்தில், மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்று, உக்ரைன்-ரஷ்யா போர் சூழலை மீறி இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் முன்னோக்கியே செல்லும் என்று தெரிவித்துள்ளார். 

இந்திய பொருளாதாரம் நன்றாக உயர்ந்து வருகிறது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் | Nirmala Sitharaman