இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை.. டாலர் மதிப்புதான் உயர்ந்துள்ளது : மத்திய அமைச்சர் புதிய விளக்கம்

Smt Nirmala Sitharaman BJP
By Irumporai Oct 16, 2022 08:44 AM GMT
Report

இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் டாலர் மதிப்பு தான் உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் என்ற அரசியல் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.இந்த நிலையில் இது குறித்து அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபோது

இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை.. டாலர் மதிப்புதான் உயர்ந்துள்ளது : மத்திய அமைச்சர் புதிய விளக்கம் | Nirmala Sitaraman Says About Indian Rupee

இந்திய ரூபாய் சரிவு

அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவாக இருப்பதாகவும் இந்தியா உட்பட மற்ற அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு எதிராகச் செயல்படுவதால் செயல்படுகிறது என்றும் அதன் காரணமாகத்தான் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.   

இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு மட்டுமே உயர்ந்துள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளின் நாணய மதிப்புகளைவிட இந்திய ரூபாயின் மதிப்பு மேலான நிலையில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.