பெற்ற வரிப்பணத்தை விட அதிகமாகவே தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளோம் - நிர்மலா சீதாராமன்!
பெற்றதைவிட அதிகமாக அதாவது, ரூ.6.96 லட்சம் கோடி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
சென்னை மேற்கு மாம்பலத்தில் இன்று விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அப்போது "நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் "பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது. மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக மாநில அரசுகளுக்குத்தான் கொடுத்துள்ளோம்.
விளக்கம்
வரி தொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். 2014 முதல் 2023 மார்ச் வரை ரூ.6.23 லட்சம் கோடி வரிப்பணத்தை தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது.
ஆனால் பெற்றதைவிட அதிகமாக அதாவது, ரூ.6.96 லட்சம் கோடி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. ரூ.50,000 கோடியில் பெங்களூரு விரைவு சாலை திட்டத்தை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது" என்று தெரிவித்தார்.
\