இஸ்லாமிய நாடுகளில் குண்டு போட்டவர் ஒபாமா : கொந்தளித்த நிர்மலா சீதாராமன்

Barack Obama
By Irumporai Jun 26, 2023 03:15 AM GMT
Report

இஸ்லாமிய நாடுகளில் குண்டு போட்டவர் ஒபாமா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஒபாமா கருத்து

பிரதமர் மோடி அமெரிக்க சென்றிருந்தபோது இஸ்லாமியர்களை பாதுகாக்கப்படாவிட்டால் இந்தியா துண்டு துண்டாக ஆகிவிடும் என தெரிவித்ததை அடுத்து ஆறு இஸ்லாமிய நாடுகளில் குண்டு போட்டது ஒபாமா தான் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளில் குண்டு போட்டவர் ஒபாமா : கொந்தளித்த நிர்மலா சீதாராமன் | Nirmala Sitaraman Answer To Obama

பிரதமர் மோடி அமெரிக்க சென்றபோது அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.  

 நிர்மலா சீதாராமன் பதில்

இது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய போது அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்து பேசியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இஸ்லாமியர்கள் வாழும் ஆறு நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா. அவரது ஆட்சி காலத்தில் தான் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் போடப்பட்டன என்றும் அவர் இஸ்லாமியர்கள் மீது திடீரென பாசம் வந்தது போல் பேசுகிறார் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஒபாமாவின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்க எகிப்து பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை பிரதமர் மோடி இந்தியா திரும்பினார் என்பது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.