GST'யால் 20 ஆயிரம் கோடி இழப்பா..? எவ்வளவு வளர்ச்சி தெரியுமா..? நிர்மலா சீதாராமன் அறிக்கை
தமிழகத்திற்கு ஆண்டிற்கு GST'யால் 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் கோடி இழப்பு
ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 30-06-2022 முதல் GST இழப்பீட்டு தொகையை நிறுத்திபட்டதாக கூறி, அதன் காரணமாக மாநிலத்திற்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிய சிறப்புத் திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தருவதில்லை” என்று குற்றம்சாட்டி இருந்தார்.
வளர்ச்சி தான்...
இதற்கு இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இப்பதிவில், "உண்மையில், ஜி.எஸ்.டி.,யால் மாநிலங்களுக்கு நன்மை தான் ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.,க்கு முன் 2012-15 காலக்கட்டத்தில் மாநிலங்களின் சராசரி வருவாய் வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி.,க்கு பின் 14.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜி.எஸ்.டி.,க்கு முன் வரி வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு 12.30 சதவீதமாக இருந்ததாக, தமிழக வணிக வரித்துறை தெரிவித்துள்ளதாக நாளிதழில் வாசித்தேன்.
"உண்மையில், ஜி.எஸ்.டி.,யால் மாநிலங்களுக்கு நன்மை தான் ஏற்பட்டுள்ளது.
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) February 21, 2024
ஜி.எஸ்.டி.,க்கு முன் 2012-15 காலக்கட்டத்தில் மாநிலங்களின் சராசரி வருவாய் வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி.,க்கு பின் 14.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜி.எஸ்.டி.,க்கு முன் வரி வருவாய்… https://t.co/BReLf2bHRI
ஜி.எஸ்.டி.,க்கு பின் தமிழகத்தின் வரி வருவாய் வளர்ச்சி 14.80 சதவீதம் என்றாலும், தமிழக அரசுக்கு லாபம் தானே! இது தவிர, 'டேக்ஸ் பாயன்ஸி' எனப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வரி வருவாய் வளர்ச்சி, ஜி.எஸ்.டி.,க்கு பின் செம்மையாகி உள்ளது. முன்பு பொருளாதார வளர்ச்சியை விட மெதுவாகத்தான் வரி வருவாய் வளர்ந்து வந்தது. இப்போது பொருளாதார வளர்ச்சியைவிட வேகமாக வளர்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.