செய்தி வாசிக்கும்போதே அவரின் மரணம்.. பூவை எடுத்து வச்சுட்டேன் - நிர்மலா பெரியசாமி வேதனை!
செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது சில மனநெருக்கடிக்கு ஆளானது குறித்து நிர்மலா பெரியசாமி பேசியுள்ளார்.
நிர்மலா பெரியசாமி
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் நிர்மலா பெரியசாமி. இதனையடுத்து சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
அதற்கு பிறகு எந்த நிகழ்ச்சியிலும் அவர் அதிகமாக கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நிர்மலா பெரியசாமி, தான் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது சில மனநெருக்கடிக்கு ஆளானது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது "ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளர் வேலையை நான் மிகவும் நேசித்து ஆசைப்பட்டு தான் சேர்ந்தேன். ஆனால் சில நேரங்களில் சோகமான செய்திகள் நம்முடைய மனதை சுக்கு நூறாக உடைத்து விடும். நடிகர் சிவாஜி கணேசன் என்றால் எனக்கு கொள்ளை பிரியம்.
வேதனை
அவர் இறந்த செய்தியை நான் படிக்க வேண்டிய நிலைமை வந்தது. அப்போது லைவ் ரெக்கார்டு கிடையாது. கட் என்று சொல்லி தான் ஒவ்வொரு செய்திகளை படிக்க வேண்டும்.
திடீரென்று சிவாஜி கணேசன் இறந்துவிட்டார் என்று செய்தியும் வந்தது. எனக்கு எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. ஏற்கனவே இரண்டு மூன்று செய்தி படித்து விட்டேன். இப்போது எனக்கு பிடித்த சிவாஜி கணேசன் சாரின் மரண செய்தியை படிக்கவேண்டும்.
ஆனால் நான் விதவிதமான அலங்காரத்தோடு இருக்கிறேன். அது எனக்கே ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்தது. ஆனாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு அந்த நேரத்தில் என்னுடைய தலையிலிருந்த பூவை மட்டும் எடுத்து வைத்துவிட்டு நான் செய்தியை படித்து முடித்தேன். இந்த மாதிரி சில விபத்து செய்திகள் படிக்கும் போது மனசு மிகவும் கஷ்டமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.