இவர்களுக்காக தான் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தேன் - நிர்மலா தேவி பரபரப்பு குற்றச்சாட்டு!!
பாலியல் பேரம்
விருதுநகர், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன.இதனையடுத்து 2018ல் கைது செய்யப்பட்டார்.
மேலும், காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் மாணவிகளிடமும், போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது.
சிறை தண்டனை
1,360 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. சுமார் ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்தும், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிர்மலா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பினை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி மனு தாக்கல் ஒன்று செய்துள்ளார்.
அம்மனுவில், தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமின் வழங்கிட என கோரப்பட்டது. அதே போல, வழக்கில் மற்ற குற்றவாளிகளான பேராசிரியர்கள் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இவருக்காக தான் மாணவிகளிடம் செல்போனில் தவறாக வழிநடத்த முயற்சித்தாக பரபரப்பு குற்றச்சாட்டை நிர்மலா தேவி வைத்துள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், விருதுநகர் சிபிசிஐடி போலீசார் இதில் விசாரணை நடத்தி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜூன் 7-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.