பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

Tamil nadu Tamil Nadu Legislative Assembly CTR Nirmal Kumar
By Karthikraja Sep 16, 2026 02:14 PM GMT
Report

nirmal kumar explains why pattinapakkam choosed for new secretariat: புதிய தலைமை செயலகம் கட்ட பட்டினபாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் ஏன்?

சென்னை பட்டினபாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், தலைமை செயலகம் மற்றும் புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் | Nirmal Kumar Say Why Pattinapakkam For Secretariat

இதற்கு பட்டினபாக்கத்தில் உள்ள மீனவ மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இது குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "அரசு அலுவலகங்கள் அனைத்தும் நகரத்திற்குள் தான் உள்ளது. பட்டினபாக்கத்தை விட்டால் மகாபலிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் தான் கட்ட முடியும்.

அங்கு மாற்றப்பட்டால் அதிகாரிகள் வந்து செல்லவே 2 மணி நேரம் ஆகும். அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னரே பட்டினபாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிலர் எதற்காக எதிர்க்கிறோம் என்று தெரியாமலே எதிர்க்கிறார்கள். மக்கள் பாதிப்பு அடையாத வகையில் தான் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்" என தெரிவித்துள்ளார்.