இளைஞர்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசும் நிரா
தமிழில் இளம் படைப்பாளிகளின், நல்ல படைப்புகளை தேடிக்கொண்டு வந்து சேர்க்கும் சினிமா காலண்டரின் அடுத்த வெளியீடாக வெளியாகியிருக்கும், ரொமான்ஸ் டிராமா குறும்படம் “நிரா”. மிரர் மைண்ட் புரடக்சன் சார்பில் தினேஷ் பிரசாத் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள இப்படத்தில் மாதேவன், ஷாலி நிவகேஷ், ஆஷிகா யாஷ் நடித்துள்ளனர்.
ஒருவருக்கு திருமணத்திற்கு பிறகு காதல் வராதா ? அப்படி வந்தால் அதை இணையிடம் எப்படி தெரிவிப்பது?, இந்த மையப்புள்ளியில் சுழலும் கதையில், இளைஞர்களின் உறவுச்சிக்கலை பேசும் குறும்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
புதிய இளம் திறமையாளர்களின் முயற்சியில் சென்னையில் ஒரே நாளில் இக்குறும்படத்தின் முழுப்படப்பிடிப்பையும் முடித்து, அசத்தியுள்ளது படக்குழு. மேலும் தமிழில் புது முயற்சியாக முதன்முறையாக டால்ஃபி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டத்தில் இக்குறும்படத்தின் ஒலியமைப்பு செய்யப்பட்டுள்ளது.
[
யூடியூப் தளத்தில் டால்ஃபி அட்மாஸ் வசதி இல்லாத காரணத்தால் 5.1 சவுட்ண்ட் சிஸ்டத்தில் இக்குறும்படம் காணக்கிடைக்கிறது. இன்றைய நவீன உலகில் இளைஞர்களின் அடிப்படை பிரச்சனையாக இருக்கும் உறவுச்சிக்கல்களையும் ஒரு விசயத்தை அணுகும் முறையில் உள்ள தயக்கத்தையும், அழுத்தமாக பேசுகிறது இப்படம்.
சினிமா காலண்டர் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறும்படத்தின் கருவையும், படத்தின் நடிகர்களின் நடிப்பு மற்றும் உருவாக்கத்தை குறிப்பிட்டு, ரசிகர்கள் இப்படத்தினை பாராட்டி வருகின்றனர்.